உள்ளூர் செய்திகள்

அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம்

Published On 2022-11-19 13:17 IST   |   Update On 2022-11-19 13:17:00 IST
  • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்க அறிவுரை
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அரக்கோணம்:

அரக்கோணம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆர்.சவுந்தர் அவைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 20-ந்தேதி மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் ஆர் காந்தி தலைமையில் நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

26-ந்தேதி நடக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் ஆகிய பணிகளை செய்ய வேண்டும். வரும் 27-ந் தேதி திமுக கழக இளைஞர் அணி செயலாளர் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.இ.போர் பாபு, பிரகாஷ், பொருளாளர் பாலன் மாவட்ட பிரதிநிதிகள் என்.ராமலிங்கம், மூர்த்தி, குப்புசாமி, மற்றும் பல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முடிவில் இணைச் செயலாளர் பூஷனா கன்னியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News