மனித கடத்தலுக்கான எதிர்ப்பு தின விழிப்புணர்வு
- கூட்டங்கள் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ெரயில் நிலையம் இருப்பு பாதை போலீஸ் நிலையத்தில் மனித கடத்தலுக்கான உலக எதிர்ப்பு தினம் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், குழு தலைவர் சதீஷ், ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக நிரோஷா, சமூக பணியாளர், பிரியதர்ஷினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சைல்டு லைன் அணித் தலைவர். சதீஷ்குமார் சைல்டு லைன் மூலம் வரும் அழைப்புகள் குறித்தும், ெரயில்வே ஜி.ஆர்.பி. ஆர்.பி.எப். மற்றும் இருப்புப் பாதை போலீஸ் நிலையம் மூலம் மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்தும் அவர்களின் தற்போதைய நிலை குறித்தும் விவரித்தனர்.
பின்பு மனித கடத்தலுக்கு எதிரான தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், சைல்டு லைன் 1098 செயல்பாடுகள் குறித்தும், ஊடகங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுவது குறித்தும் மேற்படி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கூட்டத்தில் கள பணியாளர்கள் பர்சானா, மேகலா, சுரேஷ், ஆர்த்திகா உள்பட இருப்புப் பாதை போலீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.