உள்ளூர் செய்திகள்
பழைய கட்டிடம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழைய கட்டிடம்
- அரசு பெண்கள் பள்ளி அருகே உள்ளது
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நடுவே அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பயனற்றுக் கிடக்கும் இரண்டு அரசு கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
இந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் மது குடித்து விட்டு அங்கேயே படுத்து கிடப்பதும் சீட்டு விளையாடுவதும் போன்ற சீர்கேடான செயல்களை செய்து வருகின்றனர்.
பெரிய குற்றங்கள் நடக்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.