உள்ளூர் செய்திகள்

அம்மன் தாலி செயின், உண்டியல் பணம் திருட்டு

Published On 2022-12-06 15:01 IST   |   Update On 2022-12-06 15:01:00 IST
  • கோவில் பூட்டை உடைத்து துணிகரம்
  • போலீசார் விசாரணை

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த மாங்காடு பகுதியில் நாகநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் உள்ளே அம்மன் சிலை உள்ளது. இந்தக் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அப்படி தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவர்.

இந்த நிலையில் நேற்று இரவு தரிசனம் முடிந்து கோவில் நடையை சாத்தி விட்டு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் நள்ளிரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News