உள்ளூர் செய்திகள்
மாற்று முறை இலவச மருத்துவ முகாம்
- மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் மகாலட்சுமி மாற்று மருத்துவ மையம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய முகாமிற்கு ஒன்றிய கவுன்சிலர் ஆஷா பாக்யராஜ் தலைமை தாங்கினார்.
அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமியின் தேசிய தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொணடு குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை ெதாடங்கி வைத்தார்.
மாநில இணை தலைவர் டாக்டர் எஸ்.இலட்சியகுமார் 100-க்கும் மேற்பட்டவர்களை பரிசோதித்து மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்.