உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள்

Published On 2023-06-11 14:04 IST   |   Update On 2023-06-11 14:04:00 IST
  • வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம்
  • வேளாண்மை அதிகாரி தகவல்

காவேரிப்பாக்கம்:

காவேரிப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் பாணாவரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயிர் பாதுகாப்பை மேற்கொள்ள ரூ.2000 மானியத்தில் விசைத்தெளிப்பான்கள் வழங்கப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் உயிர் உரங்களான அசோஸ்பை ரில்லம்,பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஸ் பாக்டீரியா மற்றும் அசோபாஸ் திரவ உயிர் உரங்கள் 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இது தவிர மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை எந்திர தொகுப்பு (கடப்பாரை, மண்வெட்டி, தாலா,அரிவாள் . களைக்கொத்தி) 50 சதவிகிதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கடலை பயிருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஜிப்சம் மூட்டை ரூ.108 விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இத்திட்டத்தில் கீழ் பேட்டரியில் இயங்கும் விசைத்தெளிப்பான்கள் ரூ.2000 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அனுகி பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News