உள்ளூர் செய்திகள்
வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
- விவசாயிகள் பயனடைந்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடைபெற்றது.
உதவி தோட்டக்கலை அலுவலர் தமிழரசு தலைமை தாங்கினார். துணை தோட்டக்கலை அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தோட்டக்கலை துணைஇயக்குநர் லதா மகேஷ், கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் சுமீதா, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகளும் கலந்துகொண்டனர்.