உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்
ராணிப்பேட்டையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
- ரூ.118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
- மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி திறந்து வைக்கிறார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அருகே உள்ள பாரதி நகரில் ரூ.118.40 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டப்பட்டு வருகிறது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 20-ந் தேதி திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணியை தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் (பொதுப்பணித்துறை) தயானந்த கட்டாரியா நேற்று இரவு ஆய்வு செய்தார்.
அப்போதுராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், செயற்பொறியாளர் சங்கரலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.