உள்ளூர் செய்திகள்

சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா

Published On 2023-07-23 14:32 IST   |   Update On 2023-07-23 14:32:00 IST
  • அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
  • பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம்

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி அருகே உள்ள சித்தஞ்சி கிராமத்தில் அமைந்துள்ள சித்தஞ்சி சிவகாளிசித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் உற்சவத் திருவிழா ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் தலைமையில் நேற்று நடந்தது.

இதனை யொட்டி நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தியும், 501 பேர் தீச்சட்டி ஏந்தியும் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோவில் அருகே உள்ள பம்பை நதியில் இருந்து சிவகாளி சக்தி கரக ஊர்வலம் நடந்து.

இதில் 1500 பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சொர்ண காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு ஸ்ரீ மோகனானந்த சுவாமிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார்.

இந்த விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், மனோகர், காவேரிப்பாக்கம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலாஜி், தெய்வசிகாமணி, காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் (எ) நரசிம்மன், தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் குணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News