உள்ளூர் செய்திகள்

சத்துமாவு சாப்பிட்ட 9 பேருக்கு திடீர் உடல் நிலை பாதிப்பு

Published On 2022-10-11 15:02 IST   |   Update On 2022-10-11 15:02:00 IST
  • ஆஸ்பத்திரியில் அனுமதி
  • குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சின்ன பரவத்தூர் கிராமம் அருந்ததி பாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமார் (40).

சனிக்கிழமை மதியம் மற்றும் இரவு நேரத்தில் சிவகுமார் உட்பட வீட்டிலிருந்த 6 பேர் சத்துணவு மாவில் உணவு தயாரித்து சாப்பிட்டுள்ளனர். சத்துணவு மாவு சாப்பிட்ட சிவக்குமார் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கும் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.

அதேபோல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கும் சத்துமாவு உணவு சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட 9 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 1 குழந்தை உட்பட 3 பேர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News