உள்ளூர் செய்திகள்

8 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

Published On 2023-07-29 14:49 IST   |   Update On 2023-07-29 14:49:00 IST
  • கலெக்டர் உத்தரவு
  • வருகிற 31-ந் தேதிக்குள் சேர உத்தரவு

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

அதன்படி நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவராமன், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ரவி, நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) க்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் நெமிலி வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராக பணியாற்றிய பாஸ்கரன், ஆற்காடு வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலகராகவும், அங்கு பணியாற்றிய பிரபாகரன் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய வெங்கடேசன், காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலராகவும், அங்கு பணியாற்றிய ரவிச்சந்திரன் , அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அன்பரசன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ( கி.ஊ) ஆகவும், அங்கு பணியாற்றிய ஜெயஸ்ரீ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாக நலன் கருதி பணி மாறுதல் அளிக்கப்பட்டுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் சேருமாறு மாவட்ட கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News