உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்

Published On 2022-11-03 15:03 IST   |   Update On 2022-11-03 15:03:00 IST
  • சிறப்பு வகுப்புகள் எடுத்து ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார்
  • சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலப் புலம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மணிகண்டன் என்பவரது மகன்பேரானந்தம் பிளஸ்-2 முடித்தார்.

இவர் கடந்த முறை நீட் தேர்வில் வெற்றிபெற்றாலும் 125 மதிப் பெண்கள் மட்டுமே எடுத்ததால் மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் நீட்தேர்வு எழுதி 430 மதிப்பெண்கள் பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாநில அளவில் 11-வது இடத்தையும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

இதன் மூலம் சென்னை குமருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தலைமை ஆசிரியை பரமேஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன், இயற்பியல் ஆசிரியை பவானி ஆகியோர் சிறப்பு வகுப்புகள் எடுத்து ஊக்கப்படுத்தியதாக மாணவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News