உள்ளூர் செய்திகள்
ஆசிரியர் வீட்டில் 5 பவுன் நகை, பணம் கொள்ளை
- பீரோவை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பெண்கள் பாடசாலை தெருவை சேர்ந்தவர் தயாள பாபு என்பவரது மனைவி அகிலா (வயது 46).
திமிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அகிலா வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.