உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2023-05-23 08:21 GMT   |   Update On 2023-05-23 08:21 GMT
  • கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
  • செயின் 2 துண்டானது

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் தாலுகா செளடேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர் அப்பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று பைக்கில் 2 மர்ம கும்பல் கடைக்கு வந்தனர்.

பின்னர் தண்ணீர் பாட்டில் வாங்கினர். பிறகு சிகரெட் கேட்டுள்ளனர் அப்போது கோவிந்தம்மாள் உள்ளே சென்றபோது திடீரென அவர் கழுத்தில் இருந்த 4 பவுன் செயினை பறித்துள்ளனர்.

சுதாரித்துக் கொண்ட கோவிந்தம்மாள் செயினை இறுக்கி பிடித்துள்ளார். செயின் 2 துண்டாகியுள்ளது.

ஒரு துண்டு கோவிந்தம்மாள் கையிலும் மற்றொரு துண்டு கீழே விழுந்தது உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் அந்த துண்டான செயினை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News