தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது
- 6 பவுன் நகை பறிமுதல்
- வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாலாஜா:
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தனர்.
அதில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த காடீஸ் என்பதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இவரது கூட்டாளிகளான திவாகர் (28) சதீஷ் (38), ஹர்ஷத் என்பதும் இவர்கள் தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இவர்கள் 4 பேரையும் வாலாஜா பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 2 பைக்குகள், 6 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் காடீஸ் என்பவர் 40 கொள்ளை வழக்குகள் 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.