உள்ளூர் செய்திகள்

பேக்கரியில் தின்பண்டங்கள் சாப்பிட்ட 3 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Published On 2022-09-26 10:16 GMT   |   Update On 2022-09-26 10:16 GMT
  • வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது
  • எஸ்.பி. ஆபீசில் புகார்

ராணிப்பேட்டை:

ஆற்காடு அருகே கோட்டைமேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் சாலமன். இவர் தனது குடும்பத்துடன் ராணிப்பேட்டைக்கு சொந்த வேலைக்காக சென்றுள்ளார்.

அப்போது பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் நேற்று தேநீர் அருந்து வதற்காக சென்றுள்ளார். அப்போது சாலமனும் அவரது மனைவி ரூபியும் தேநீர் சாப்பிட்ட நிலையில் சிறுவர்களான சைமன் (10), ரூபன் (7), மற்றும் ஜான்சன் (9) ஆகிய 3 பேர் (சாண்வெட்ஜ்) ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு சென்றதும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 3 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தபோது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதே காரணம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் உதவியோடு பேக்கரியில் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உணவு தயார் செய்யும் இடத்திலிருந்து நிறத்தை கூட்ட பயன்படும் ரசாயன நிறமிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் கடையிலிருந்த (சாண்ட்வெஜ்) மற்றும் இதர உணவு பொருட்களை சோதனைக்காக எடுத்துச் சென்றதோடு பேக்கரியை தற்காலிகமாக பூட்டிவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News