உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட லாரியை படத்தில் காணலாம்.

ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 23 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-24 16:07 IST   |   Update On 2022-09-24 16:07:00 IST
  • 2பேர் கைது
  • போலீசார் விசாரணை

வாலாஜா:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே ஆந்திராவிற்கு கடத்தி செல்வதற்காக லாரியில் எடுத்து வரப்பட்ட 23 டன் ரேசன் அரிசி ர் பறிமுதல் செய்தனர்.

சென்னை பூந்தமல்லியிலிருந்து ஆந்திராவிற்கு லாரியில் ரேசன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குடிமை பொருள் குற்றப்பிரிவு புலானாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் ரில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த லாரியை நிறுத்தி பரிசோதனை செய்ததில் லாரி முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக லாரியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் போலீசார், ரேசன் அரிசி மூட்டைகளை அளவீடு செய்தனர். இதில் சுமார் 23 டன் மதிப்பிலான ரேசன் அரிசி மூட்டைகளை ஆந்திராவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமு ஆகிய 2  கைது செது விர நடத்தி வருன்றனர்.

Tags:    

Similar News