உள்ளூர் செய்திகள்

தொழிலாளர் தினவிழா நடந்த காட்சி.

ரெயில்வே துறையில் 2 லட்சம் காலி பணியிடங்கள்

Published On 2022-07-05 13:55 IST   |   Update On 2022-07-05 13:55:00 IST
  • தொழிற்சங்க துணைத்தலைவர் தகவல்
  • தொழிலாளர் தின விழா நடந்தது

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலைய 2-வது நடைமேடையில் அகில இந்திய எஸ்.சி., எஸ்டி ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட துணைத் தலைவர் ஞானசேகரன் ெரயில்வே நிர்வாகம் தனியார் மையம் ஆக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ெரயில்வே ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து ஞானசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ெரயில்வே துறையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது புதிதாக இயக்கப்பட்ட தனியார் ெரயிலில் மும்மடங்கு கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் சாதாரண பயணிகள் ரெயிலை தற்பொழுது விரைவுரெயிலாக மாற்றி ரெயில்வே நிர்வாகம்ரெயில் பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ரெயில்வேவில் பணியாற்றக்கூடிய ஊழியர்களை வஞ்சிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகம் கூறினார்.

ெரயில்வே துறையில் 2 லட்சம் அளவிற்கு காலி பணியிடங்கள் உள்ளது இதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல் காலி பணியிடங்களை முடக்கி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரக்கோணம் கிளைச் செயலாளர் ராஜேஷ் பொருளாளர் வெங்கடேசன் துணைத் தலைவர் மதன் துணை செயலாளர் குணசேகரன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News