உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2023-04-12 08:57 GMT   |   Update On 2023-04-12 08:57 GMT
  • கலெக்டர் தொடங்கி வைத்தார்
  • மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்று உறுதிமொழி

ராணிப்பேட்டை:

தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சார்பில், தனியார் தொழில் நிறுவன பணியாளர்கள் பங்கு பெற்ற பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் ராணிப்பேட்டையில் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலத்தை கலெக்டர் வளர்மதி கொடிய சைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியினையும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக அனைவரும் மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில், அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

முதல்- அமைச்சர் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பதற்காக மீண்டும் மஞ் சப்பை திட்டத்தினை தொடங்கி வைத்தார். ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்து வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும். நம் வீட் டில் உள்ள குப்பைகளை மக் கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே இதுகுறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் குழந்தைகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். எதிர்கால தலைமுறையினருக்கு தூய் மையான சுற்றுப்புறத்தை வழங்கிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூ ழல் விழிப்புணர்வு தோரணம், பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணர்வு கருத் துக்களை முழங்கிக்கொண்டு நகரத்தின் முக்கிய வீதி வழியாக சென்று ராணிப்பேட்டை புதிய பஸ் நிலையத்தை அடைந்தனர்.

இதில் தமிழ்நாடு மாசு கட் டுப்பாட்டு வாரிய செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News