உள்ளூர் செய்திகள்

யோகா ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காசிநாததுரை பேட்டியளித்தார்.

அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

Published On 2023-04-02 14:34 IST   |   Update On 2023-04-02 14:34:00 IST
  • அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகி கூறி உள்ளார்.
  • மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் காசிநாத துறை நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டுத்துறையிலும் இந்தக் கல்வி ஆண்டிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் இயற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்து விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்தார்.

அவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளியேறி விட்டனர். அவர்களை மீண்டும் விளையாட்டு துறைகளில் நியமிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையிலும் யோகா போட்டியை சேர்க்க வேண்டும்.

முதல்-அமைச்சர் யோகா கல்விக்கு தனி கவனம் செலுத்தி யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சி யாளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தனர். அதை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டும்.

எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பட்சத்தில் ஜூன் 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News