உள்ளூர் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக மாற்றப்படுமா?

Published On 2023-07-05 07:13 GMT   |   Update On 2023-07-05 07:13 GMT
  • தொண்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக மாற்றப்படுமா?
  • வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சியாகவும் வளர்ந்து வரும் நகரமாகவும் உள்ளது.

இங்கு உள்ள மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்தக் ேகாரி, தமிழக அரசின் சுகாதாரத்துறை வழங்கிய அனைத்து ஆவணங்களுடன் மனித நேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதை நீதிபதிகள் வைத்தியநாதன், பரத் சக்கர வர்த்தி ஆகியோர் முன்பு டிவிஷன் பெஞ்சில் விசா ரணை நடந்தது. தொண்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என மதுரை ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.

மேலும் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வருகிற 6-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.அரசு மருத்துவமனையை நம்பியுள்ள தொண்டி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராம மக்கள் சுகாதார தேவையை அரசு நிறைவேற்றுமா? மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்படுமா? என இப்பகுதி பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News