உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ரூ.7.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-13 08:48 GMT   |   Update On 2022-10-13 08:48 GMT
  • கீழக்கரை அருகே 142 பயனாளிகளுக்கு ரூ.7.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • அரசின் திட்டங்கள் குறித்த சாதனைகள் விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் உத்தரவை ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தேடி வந்த நிலை மாறி மாவட்ட நிர்வாகமே மக்களை தேடி முகாமிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசு உத்தரவிட்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இப்பகுதி யில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தொடர்புடைய அலு வலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு இதன் மூலம் 142 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் 116 மனுக்கள் பெறப்பட்டு மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் உரிய தீர்வுகள் வழங்கப்ப டும் என்றார்.

அதனை தொடர்ந்து 142 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 565 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் வழங்கினார்.

முன்னதாக அவர், அரசின் திட்டங்கள் குறித்த சாதனைகள் விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகத நாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் குணசேகரன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் புல்லாணி, கீழக்கரை வட்டாட்சியர் சரவணன், உத்தரவை ஊராட்சி மன்ற தலைவர் கணேஷ், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமா சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News