உள்ளூர் செய்திகள்

மீன்பிடிப்பதில் விதி மீறல்: ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு

Published On 2023-02-17 08:04 GMT   |   Update On 2023-02-17 08:04 GMT
  • மீன்பிடிப்பதில் விதி மீறல் செய்ததாக ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே தடை மீறும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள சட்ட அமலாக்க துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, புதுமடம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் தடையை மீறி இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மீனவர்களின் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜன.23-ந்தேதி வரை 16 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிடிபட்ட மீன்கள் ஒரு லட்சத்து 67 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News