உள்ளூர் செய்திகள்

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 

காவிரி குடிநீருக்கு 10 ஆண்டுகளாக காத்திருக்கும் கிராம மக்கள்

Published On 2023-03-09 12:51 IST   |   Update On 2023-03-09 12:51:00 IST
  • காவிரி குடிநீருக்கு 10 ஆண்டுகளாக கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.
  • நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் பகுதிக்கு உட்பட்ட தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் ஆகிய இடங்களில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் கிராம மக்கள் காவிரி தண்ணீ ருக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர். மேலும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும்போது, தரைக்குடி, புனவாசல், வல்லகுளம் பகுதிக்கு உட்பட்ட 15 கிராம மக்கள் தண்ணீர் குடம் ரூ.15 -க்கு வாங்கி வருகிறோம். டிராக்டரில் கொண்டு வரப்படும் குடிநீரை விலைக்கு வாங்கி குடித்து வருகிறோம். அதுவும் வராவிட்டால் குடிதண்ணீருக்கு மிகவும் சிரமம் ஏற்படும். இந்த குடிநீரை குடிப்பதால் முதி யோர்கள், குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகி றது.

காவிரி குடிநீர் வராதது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.கிராமத்திற்கு வரும் காவிரி குடிநீர் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி றது. எனவே நீண்டநாள் கோரிக்கையான காவிரி குடிநீர் வருவதற்கு அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News