உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பால்ராஜ்-சந்திரகலா இல்ல திருமணவிழா நடந்தது.

வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பால்ராஜ் இல்ல திருமண விழா

Published On 2022-11-27 14:16 IST   |   Update On 2022-11-27 14:16:00 IST
  • வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் என்ஜினீயர் பால்ராஜ் இல்ல திருமண விழா நடந்தது.
  • மணமகன் வீட்டார் சார்பில் சண்முகம் யாதவ்-சாந்தி, கஜேந்திரன் யாதவ்-இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வெங்க டேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளரும், அரசு முதல் நிலை ஒப்பந்ததாரருமான என்ஜினீயர் பால்ராஜ் -சந்திரகலா மகள் ரேடியாலஜி மருத்துவ நிபுணர் டாக்டர் சிந்துஜா பால்-க்கும், சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் யாதவ்- சாந்தி மகன் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சரத்குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் இன்று காலை ராமநாதபுரம் கேணிக்கரை தனியார் மகாலில் நடந்தது.

மணவிழாவில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், வி.எம்.அன் கோ நிறுவனர் என்ஜினீயர் வேலு மனோகரன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், அரசு உயர் அலுவலர்கள், சமுதாய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழத்தினர்.

திருமண விழாவுக்கான ஏற்பாடுகளை என்ஜினீயர் பால்ராஜ்-சந்திரகலா மற்றும் வெங்கடேஸ்வரா கன்ஸ்ட்ரக்சன் இயக்குநர் டாக்டர் வெங்கட்ராஜ் பால். வெங்கடேஸ்வரா பியூல்ஸ், எண்டர் பிரைசஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் மணமகன் வீட்டார் சார்பில் சண்முகம் யாதவ்-சாந்தி, கஜேந்திரன் யாதவ்-இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News