உள்ளூர் செய்திகள்

சீருடைப் பணியாளர் தேர்வு 6 மையங்களில் நடக்கிறது

Published On 2023-08-25 13:20 IST   |   Update On 2023-08-25 13:20:00 IST
  • சீருடைப் பணியாளர் தேர்வு 6 மையங்களில் நடக்கிறது
  • இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்

தமிழக போலீஸ் துறையில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையில் நிலைய அதிகாரி பணியிடங்கள் ஆகியவற்றை நிரப்ப தேர்வுகள் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்டத்தில் மேற்கண்ட தேர்வினை எழுத 6 ஆயிரத்து 230 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வுகள் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 12.30 மணி வரை எழுத்து தேர்வும், மதியம் 3.30 முதல் 5.10 வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.

பரமக்குடி கே.ஜே.எம். மேல்நிலைப்பள்ளி, பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, ராமநா தபுரத்தில் வேலுமாணிக்கம் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செய்யத ம்மாள் கலை அறிவியல் கல்லூரி, செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி, செய்ய தம்மாள் மெட்ரிக் பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

தேர்வு மையத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு குழுமத்தால் வழங்கப்பட்ட புகை படத்துடன் கூடிய அழைப்பு கடிதத்தினை கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.அழைப்பு கடிதத்தில் புகைப்படம் இல்லாமலோ அல்லது தெளிவாக இல்லாமலோ இருந்தால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி அரசு பதிவு பெற்ற அலுவலரிடம் கையொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும்.

அரசால் வழங்கப் பட்டுள்ள புகைப்படத்து டன் கூடிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டும். தேர்வில் கலந்து கொள்ள வரும் விண்ணப்பதாரர்கள் சரியாக காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும்.

காலதாமதமாக வருப வர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் சாதனங்கள், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் கொண்டுவர அனுமதி இல்லை. விண்ணப்ப தாரர்கள் தேர்வுக்கு வரும் பொழுது அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனா ஆகிய வற்றை தவிர வேறு எதுவும் கொண்டுவரக்கூடாது.

இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News