உள்ளூர் செய்திகள்

அபிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Published On 2023-08-11 08:21 GMT   |   Update On 2023-08-11 08:21 GMT
  • கண்மாய்கள், குளங்கள் வறண்டதால் அபிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
  • அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபிராமம்

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவ மழை யை நம்பி நெல், மிளகாய் பருத்தி. மற்றும் சிறுதானி யங்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தனர் .

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அபிராமம், கமுதி பகுதியை சுற்றியுள்ள நீர்வழித்தடங் களான மலட்டாறு, குண்டாறு.பரளையாறு கிருதுமால் நதி நீர்நிலை கால்வாய்களும் தண்ணீர் வராததால் வறண்டு காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது.

தற்போது உள்ள சூழ் நிலையே தொடருமானால் பருவமழை தொடங்குவதற்கு முன் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News