உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் அருகே அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவர்கள், சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடிய காட்சி.

மீனவர் குடியிருப்புக்கு சென்று கலந்துரையாடிய முதல்-அமைச்சர்

Published On 2023-08-18 07:07 GMT   |   Update On 2023-08-18 07:07 GMT
  • அக்காள்மடம் பகுதியில் மீனவர் குடியிருப்புக்கு சென்று முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.
  • சிறுவர், சிறுமிகளுடன் படிப்பு பற்றி கேட்டறிந்தார்.

ராமநாதபுரம்

ராநாதபுரம் மாவட்டம், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மீனவ குடும்பத்தை சேர்ந்த வர்களிடம் கலந்துரையாடினார்.

ராமநாதபுரம் பேராவூர் பகுதியில் நடந்த தி.மு.க. தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.

மண்டபத்தில் இன்று தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணை யம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர் களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபு ரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் வழியில் அக்காள் மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவ தற்கு தேவையான நடவ டிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா? என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.

அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அக்காள்மடம் மீனவர் குடி யிருப்பு பகுதியில் உள்ள மாணவர்களுடன் கலந்துரை யாடி அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்ட றிந்தார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராம லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் மற்றும் அதிகாரி கள், கட்சியினர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News