உள்ளூர் செய்திகள்

குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் அவதி

Published On 2023-07-21 08:10 GMT   |   Update On 2023-07-21 08:10 GMT
  • குடிமகன்கள் தொல்லையால் மாணவிகள்-பெண்கள் முகம் சுழிக்கின்றனர்.
  • மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அபிராமம்

அபிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகிலேயே மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த மதுக் கடையை அகற்ற வேண்டும் என தொடர்ச் சியாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மதுக்கடை தொடர்ந்து அங்கேயே செயல்பட்டு வருகிறது.

அபிராமத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள அகத்தாரிருப்பு, அச்சங்குளம், பள்ளபச்சேரி தீர்தாண்டதானம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் அபிராமம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் அபிராமம் பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையில் குடித்து விட்டு தள்ளாடியபடி சுற்றி திரிகின்றனர். மேலும் அங்குள்ள கடைகளில் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும், பள்ளி மாணவ-மாணவிகளும் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் போது முகம் சுழித்தபடி உள்ளனர்.

மேலும் அவர்களை தட்டிக் கேட்கும் பொதுமக்களை தாக்கி தகராறு செய்கின்றனர். மேலும் போதையில் இருக்கும் ஆசாமிகளை கண்டிக்கவும் பலர் தயங்குகின்றனர். பலர் போதை தலைக்கேறி அரை குறை ஆடையுடன் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பெண்கள் முகம் சுழித்தபடி நிற்கின்றனர். இந்த நிலையில் போதையில் பயணி களுக்கும், வியாபாரி களுக்கும் தொல்லை கொடுத்து வரும் போதை ஆசாமிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பஸ் நிறுத்த பகுதியில் போதை ஆசாமிகள் திரியாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும், பஸ் நிறுத்தத்தின் அருகில் உள்ள மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News