உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரிக்கை

Published On 2023-11-06 12:59 IST   |   Update On 2023-11-06 12:59:00 IST
  • ராமநாதபுரத்தில் மீனவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • வருகிற 8-ந்தேதி ராமேசுவரம் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் கடல் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.) ராமநாதபுரம் மாவட்ட குழு செயலாளர் கருணாமூர்த்தி கூறியதாவது:-

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் பகுதி மீன வர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். இதனால் மீனவர்கள் பிழைப்பு தேடி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி நாடு களுக்கும் செல்கின்றனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு நிதியாக நாள் ஒன்றுக்கு ரூ.250 வழங்கப்பட்டது.பின்னர் ரூ.350-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. ரூ.500 வழங்க வேண்டும். அதை மீனவர்கள் சிறையில் இருக்கும் காலத்தில் வழங்க வேண்டும்.

மீனவர்கள் சிறைப்படுத் தப்பட்ட 2 நாட்களில் உடனடியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த தொகை மீனவர்கள் விடுதலையாகி இரு மாதங்கள் கழித்து தான் பல ஆண்டுகளாக வழங்கப் பட்டு வருகிறது. தற்போது ராமேசுவரம் பகுதியில் இருந்து மட்டும் 64 மீன வர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை வருவதால் செல வுக்கு பணம் இன்றி மீனவ குடும்பத்தினர் தவிக்கின்ற னர். குடும்ப பாதுகாப்பு நிதியை முறையாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக வழங்காவிட்டால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுடன் வருகிற 8-ந்தேதி ராமேசு வரம் மீன் வளத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News