உள்ளூர் செய்திகள்

மக்கள் சங்கமம் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்ற கோரிக்கை

Published On 2022-07-27 08:29 GMT   |   Update On 2022-07-27 08:29 GMT
  • தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட நிலையமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் தொடர் முழக்க பிரசாரம் நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் சங்கமம் என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் நடத்த திட்டமிட்டு 6-வது நிகழ்ச்சியாக மக்கள் சங்கமம் மாநாடு கூரியூர் ஜின்னா திடலில் நடந்தது.

மாநாட்டு குழு தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திருவாடானை தலைவர் ஹமீது இப்ராஹிம் வரவேற்றார். நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமீரா பானு, தேவிபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகு அபுல் ஹசன், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் கைசர், எஸ்.டி.பி.ஐ.கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில பொதுச் செயலாளர் அர்ஷத் அஹமது அல்தாபி ஆகியோர் பேசினர்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் செய்யது இபுராஹிம், மாவட்ட செயலாளர்கள் சேக் தாவூது, ராஜிக் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான், கிழக்கு மாவட்ட செயலாளர் நஜ்முதீன், தேவிபட்டினம் நகர் தலைவர் ஜலாலுதீன், தொகுதி இனணச் செயலாளர் நூர் முகமது முன்னிலை வகித்தனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேவிபட்டினம் மக்கள் சங்கமம் குழு உறுப்பினர் அபுதாஹிர் நன்றி கூறினார்.

தேவிபட்டினத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து மீட்பு சிகிச்சை பிரிவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடு க்கவும், மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கடல் அட்டையின் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News