ராமேசுவரம் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி தபால் அலுவலகம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
ராமேசுவரம் மீனவர்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
- ராமேசுவரம் மீனவர்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுப டுத்தப்பட்டு வருகிறது. இதில், 3,500 மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர் கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்து வருகிறார்கள். முழுமையாக மீன்பிடி தொழிலை நம்பியே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்ப டகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். படகுகள் பறிமுதல் செய்யப் பட்ட நிலையில் மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட னர்.
இலங்கை கடற்படையின ரின் இந்த அராஜக நடவ டிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகு களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தை அறிவித்துள்ளனர். இதனால் மீன்பிடி தொழில் முழுவதுமாக முடங்கிய தோடு, கோடிக்கணக்கில் வர்த்தகமும் பாதிக்கப்பட் டுள்ளது.
இந்தநிலையில் மூன்றா வது நாளாக இன்று போராட்டம் தொடர்கிறது. இதற்கிடையே மீனவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ராமேசுவரம் தபால் அலுவ லகம் முன்பு அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் என்.ஜே.போஸ், ஜேசுராஜா, சகாயம் எமரிட், நடேச நாட்டார், ஆல்வின் பிரான் சிஸ், அந்தோணி பிரசாத், பாக்கியநாதன் மற்றும் நிர் வாகிகள் கலந்துகொண்ட னர்.