உள்ளூர் செய்திகள்

குண்டு எறிதல் போட்டிக்கு ராமநாதபுரம் மாணவர் தேர்வு

Published On 2022-10-15 07:57 GMT   |   Update On 2022-10-15 07:57 GMT
  • மாநில குண்டு எறிதல் போட்டிக்கு ராமநாதபுரம் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
  • அவரை பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

கீழக்கரை

ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான இரும்பு குண்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் பள்ளி பிளஸ்-2 மாணவர் முகம்மத் அகிப் முதல் பரிசு பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவரை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Tags:    

Similar News