உள்ளூர் செய்திகள்

பரமக்குடி வார்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

Published On 2022-11-04 13:23 IST   |   Update On 2022-11-04 13:23:00 IST
  • பரமக்குடி வார்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என பகுதி சபை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் பகுதி சபை கூட்டம் நடந்தது. 24-வது வார்டில் நகர மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 31-வது வார்டில் நகர் மன்ற துணைத் தலைவர் குணசேகரன் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது.

28-வது வார்டில் கவுன்சிலர் தனலட்சுமி ராஜீ, 33-வது வார்டில் நகரமன்ற துணை தலைவர் குணசேகரன், 13-வது வார்டில் கவுன்சிலர் அப்துல் மாலிக் தலைமையில் பகுதி சபை கூட்டம் நடந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், தினமும் தெருக்களை சுத்தம் செய்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும், மின் மோட்டார் பயன்படுத்தி குடிநீர் எடுப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News