உள்ளூர் செய்திகள்

சுற்றுலா இடங்களை காண மினி பஸ்களை இயக்க நடவடிக்கை

Published On 2023-09-22 07:07 GMT   |   Update On 2023-09-22 07:07 GMT
  • சுற்றுலா இடங்களை காண வசதியாக ராமேசுவரத்தில் மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்க ளில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர்

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 21 வார்டுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். மேலும் நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அரசு பஸ்களின் மூலம் 5 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். ராமேசுவரத்தில் அரசு பஸ்சை தவிர தனியார் பஸ் வசதிகள் இல்லை.

பஸ் நிலையம் முதல் கோவில் வரை,கோவில் முதல் தனுஷ்கோடி வரை பஸ்கள் சென்று வருகிறது. இதில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பஸ்சில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.

மேலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பணம் செலுத்தி செல்கின்றனர். வெளியூர் நபர்களை மட்டுமே குறிவைத்து ஆட்டோக்கள் இயக்கப்படு கிறது. இதனால் உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்களில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவில், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமர் கோவில், கெந்தமான பர்வதம், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News