உள்ளூர் செய்திகள்

திருவாடானை எம்.எல்.ஏ. ராம.கருமாணிக்கத்திடம் ஊராட்சி மன்றத் தலைவர் யாழினி புஷ்பவள்ளி கோரிக்கை மனு அளித்தார்.

குடிநீர் மேல்நிலை தொட்டி திறப்பு

Published On 2023-07-11 13:13 IST   |   Update On 2023-07-11 13:13:00 IST
  • ரூ.13 லட்சம் மதிப்பில் குடிநீர் மேல்நிலை தொட்டியை ராம.கருமாணிக்கம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
  • இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி வாணி கிராமத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சம் மதிப்பில 30 ஆயிரம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதனை திருவாடானை எம்.எல்.ஏ. ராம.கருமா ணிக்கம் திறந்து வைத்தார்.

இந்த விழாவிற்கு சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி புஷ்பவள்ளி, ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர் சேவுக பெருமாள், உதவி பொறியாளர் கணபதி சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர் சீனி செய்யது அம்மாள், மாவட்ட காங் பொரு ளாளரும், வாலியா நிறுவ னங்கள் உரிமையாளரு மான ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.விடம் ஊராட்சி மன்ற தலைவர் யாழினி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றி தருமாறு கோரிக்கை மனு அளித்தார்.

அதில் நேரு நகர் நாகப்பா ஊரணியில் வடிகால் கால்வாயை சீரமைத்து தர வேண்டும். மேலச்சோ த்தூரணி அருந்ததியர் குடியிருப்பில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து கலையரங்கம் கட்டித் தர வேண்டும், மகா சக்தி நகர் மேற்கு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காங் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இப்ரா ஹீம், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேது, பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News