உள்ளூர் செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட பத்திரப்பதிவு மண்டல அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றினார். அருகில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளனர்.

பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடக்கம்

Published On 2022-12-29 06:07 GMT   |   Update On 2022-12-29 06:07 GMT
  • ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பத்திரப்ப திவுத்துறை அலுவலகத்தில் ராமநாதபுரம் மண்டல அலுவலகம், மதுரையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

அதனைத்தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், மதுரை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ராமநாதபுரம் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் தனியாக பிரித்து ராமநாதபுரத்தில் பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் செயல்பட தொடங்கியுள்ளது.

இந்த மண்டல அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்களின் பணிகள் இந்த மண்டல அலுவலகத்தின் மூலமாக செயல்பட தொடங்கும்.

இதற்கு முன்னர் மதுரை மண்டல அலுவலகத்தில் இந்த மாவட்டங்களுக்கான பணிகள் நடந்து வந்தன. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மண்டல பத்திரப்பதிவு அலுவலகமாக பிரிக்கப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் ரத்தினவேல், ரமேஷ், ராமநாதபுரம் நாகராட்சி தலைவர் கார்மேகம், நாகராட்சி துணைத்தலைவர் பிரவீன் தங்கம், பத்திரப்பதிவு அலுவலக கண்காணிப்பு அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News