உள்ளூர் செய்திகள்

தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்

Published On 2023-01-20 15:24 IST   |   Update On 2023-01-20 15:24:00 IST
  • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
  • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ராமேசுவரம்

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Tags:    

Similar News