உள்ளூர் செய்திகள்

நகராட்சி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்

Published On 2022-07-23 08:10 GMT   |   Update On 2022-07-23 08:10 GMT
  • கீழக்கரையில் தரமற்ற தார் சாலை போடுவது தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

கீழக்கரை

கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 19 மற்றும் 20 வார்டு வடக்கு தெரு பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் எர்சத்கான் என்பவருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

தார்சாலை போடப்பட்ட நிலையில் ஓரத்தில் கிராவல் பரப்பும் பணி, சாலையை சுத்தம் செய்யும் பணி, வெள்ளை கோடு போடும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஒப்பந்ததாரருக்கு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நகராட்சி ஆணையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணியினை மேற்கொண்டு சரி செய்ய தொடர்ந்து தெரிவிக்கப்பட்டும் எவ்வித பணியும் நடக்கவில்லை.

பணியின் குறைபாடு தொடர்ந்து துரிதமின்மை, அலட்சியத்தினால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு அரசுக்கும், நகராட்சிக்கும், அவப்பெயர் ஏற்பட காரணமாக இருப்பதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர், மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆகியோருக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News