உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை முருகேசன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார். 

தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

Published On 2023-09-01 13:13 IST   |   Update On 2023-09-01 13:13:00 IST
  • தண்ணீர் குடித்து உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
  • புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பரமக்குடி

பரமக்குடி அருகே பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி பஞ்சாயத்தில் மீனங்குடி கிராமம் உள்ளது. கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக நீர் தேக்க தொட்டி உள்ளது.

நேற்று குடிநீர் வினியோ கம் செய்யப்பட்ட நிலையில் அதனை குடித்த பள்ளி மாணவ மாணவிகள் திடீரென மயக்கம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள் சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் மயக்கமடைந்த மாணவ மாணவிகளை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மருத்துவ மனைக்கு வந்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து மருத்துவர்களை அழைத்து மாணவ மாணவிகளுக்கு தீவிரச் சிகிச்சை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மீனங்குடி கிராமத்திற்கு சென்று பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, பரமக்குடி தாசில்தார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் மீனங்குடி கிராமத்திற்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி குடித்து ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News