உள்ளூர் செய்திகள்
- கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் செய்யாமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சிவகுமார், மேலக்கொடுமலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா, கால்நடை ஆய்வாளர் முனீஸ்வரி, வீரகேசரி, கால்நடை உதவியாளர் அழகுமீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 142 மாடுகள், 483 வெள்ளாடுகள், 892 செம்மறியாடுகள், 21 நாய்கள், 386 கோழிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த கிடேரி கன்று வளர்த்த உரிமையாளர்களுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.