உள்ளூர் செய்திகள்

தரணி முருகேசன்.

பா.ஜனதாவை வலுப்படுத்துவோம்

Published On 2023-04-01 13:57 IST   |   Update On 2023-04-01 13:57:00 IST
  • ராமநாதபுரத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேட்டியளித்துள்ளார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக தரணி முருகேசன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை வேளாண் விவசாயியும், தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மாவட்ட பா.ஜனதா பொருளாளருமான தரணி முருகேசனை ராமநாதபுரம் புதிய மாவட்ட தலைவராக மாநில தலைவர் அண்ணா மலை நியமித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தரணி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது. மத்தியில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகி றது. அகில இந்திய அளவி லும் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜனதா விளங்கி வருகிறது.

அதேபோல தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா மலையின் செயலாற்றல் காரணமாக பா.ஜனதா எழுச்சியுடன் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திலும் தாமரை சின்னமும், பா.ஜனதா கொடியும் சென்றடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தில் பா.ஜனதா சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்ற கூடிய அள விற்கு எங்களின் கட்சிப் பணியும், செயல்பாடும் அமையும்.

அனைத்து சமுதாய மக்களின் ஆதரவைவும் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம். மூத்த நிர்வாகிகள், முன்னோடி களின் ஆலோசனையும் பெற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்வோம்.

எந்த தேர்தல் நடை பெற்றாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வலுப்படுத்து வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News