உள்ளூர் செய்திகள்

கமுதி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-11 14:15 IST   |   Update On 2023-06-11 14:15:00 IST
  • கமுதி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழ ராமநதி கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக யாகசாலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை தீபாதாரணை நடைபெற்றது. முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அதனை தொடர்ந்து முத்தாலம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், மூலிகை, திரவிய அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனை வருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News