உள்ளூர் செய்திகள்

மூலிகை செடி வளர்த்த மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2023-01-21 08:06 GMT   |   Update On 2023-01-21 08:06 GMT
  • தொண்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூலிகை செடி வளர்த்த மாணவர்களை பாராட்டினர்.
  • பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு பள்ளி முழுவதும் பசுமையாக உள்ளது. அதே போல மாணவ, மாணவிகளும் தங்களது வீட்டுத்தோட்டங்கள் மற்றும் மாடித்தோட்டங்களில் மூலிகை செடிகளை வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்த பள்ளி சார்பில் பல்வேறு மருத்துவ குணமுள்ள மூலிகை செடிகளை வளர்க்க பயிற்சியளிக்கப்பட்டது.

பலர் ஆர்வத்துடன் செடிகளை வீடுகளில் வளர்த்து வந்தனர். அதன்படி தாங்கள் வளர்த்த செடிகளை பள்ளிக்கு கொண்டுவந்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் வரவேற்றார். வகுப்பு தொடங்கும் முன்பு கடவுள் வாழ்த்து சமயத்தில் செடிகளை நன்கு வளர்த்த மாணவ, மாணவிகளை ஆசிரியைகள் சுபஸ்ரீ, புஷ்பா, அம்சத் ராணி, ரம்யா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News