உள்ளூர் செய்திகள்

வீட்டுமனை பட்டாக்களை முறைகேடு செய்து விற்பனை

Published On 2023-05-10 08:15 GMT   |   Update On 2023-05-10 08:15 GMT
  • வீட்டுமனை பட்டாக்களை முறைகேடு செய்து விற்கப்படுகிறது.
  • பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் காஞ்சிரங்குடி பகுதியில் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 1995-ம் ஆண்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. தற்போது அது தொடர்பான ஆணைகளில் திருத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதற்காக தாசில்தார் அவற்றைக் கேட்பதாகவும் கூறி, சில தனிநபர்கள் பட்டாக்களை பயனாளிகளிடம் வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த நபர்கள் பட்டா ஆவணங்களை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட இடங்களை வேலி அமைத்து ஆக்கிரமித்து வருவதாகவும், போலி ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களை விற்பனை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுத்தர வேண்டும் என காஞ்சிரங்குடி காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் மனு அளித்தனர்.

அதில், கடந்த 1995-ம் ஆண்டு பட்டாக்கள் வழங்கப்பட்ட பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்க வேண்டும் என்றும், புதிதாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்கள் மீதான ஒப்படைப்பு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News