உள்ளூர் செய்திகள்

மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம்

Published On 2023-05-20 13:30 IST   |   Update On 2023-05-20 13:30:00 IST
  • மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம் மீண்டும் சாதிப்போம்.
  • இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் பேட்டியளித்தார்.

கீழக்கரை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம். மீண்டும் சாதிப்போம் என்று கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. மறு தேர்வு எழுதி பிளஸ்-1 படிக்கலாம்.மதிப்பெண் குறைந்ததாலும், தோல்வியடைந்ததாலும் எந்த விதத்திலும் மனம் தளர வேண்டாம். பெற்றோர்களும் கவலை கொள்ள வேண்டாம். நல்ல மதிப்பெண்கள் மறு தேர்வில் பெற்று உயர்கல்வி படிக்கலாம்.

மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.மதிப்பெண் குறைந்த தற்கும், தோல்விய டைந்ததற்கும் காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News