உள்ளூர் செய்திகள்

சுகாதாரமற்ற முறையில் தயாராகும் உணவுகள்

Published On 2023-02-14 08:12 GMT   |   Update On 2023-02-14 08:12 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாராகின்றன.
  • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அலட்சியமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி, உச்சிப்புளி, தேவிபட்டினம் உள்பட பல்வேறு நகரங்களில் பெரும்பாலான உண வகங்கள், சாலையோர தள்ளு வண்டிகள், இறைச்சி விற்பனை கடைகளில் சுகாதாரம் கடைபிடிக்கப்படுவதில்லை. சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவை உண்பதால் பொது மக்களுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் தொடர்கின்றன.

ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள் சுமார் 300க்கும் மேல் உள்ளன. இவற்றில் அசைவ சாப்பாடு, பிரியாணி என காலை, பகல், இரவு நேரங்களில் விற்பனை செய்யப் படுகின்றன. பெரும்பாலான உணவகங்கள் சுகாதார மற்ற நிலையில் உள்ளது.

தண்ணீர் தொட்டி, உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமற்ற நிலை, விதிமுறைப்படி பாத்தி ரங்கள் கழுவப்படாதது, திறந்தவெளியில் உணவு பண்டங்கள், பயன் படுத்தப்பட்ட எண்ணைகள், காலாவதியான இறைச்சி என பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது.

நகர் பகுதியில் மட்டும் அதிகம் இருந்த துரித உணவகங்கள் தற்போது பல்வேறு இடங்களில் அதிகரித்து உள்ளன. இவற்றை கண்காணிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறை யினர் மற்றும் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் கண்துடைப்பு ஆய்வு பணிகளை பெயரளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோட்டோர திறந்த வெளிக்கடைகள் பாதுகாப்பு இல்லாமல் உணவுகளை வைத்து விற்பனை செய்வது தொடர்கிறது. உணவு பாதுகாப்புத்துறையினரின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டு வருவது சாமானிய பொதுமக்கள் மட்டுமே.

சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

Similar News