உள்ளூர் செய்திகள்

 தேனீ வளர்ப்பு மையத்தை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார்.

தேனீ மகசூல் மூலம் அதிக வருவாய் ஈட்டி விவசாயி சாதனை

Published On 2022-11-25 13:56 IST   |   Update On 2022-11-25 13:56:00 IST
  • தேனீ மகசூல் மூலம் அதிக வருவாய் ஈட்டி விவசாயி சாதனை படைத்துள்ளார்.
  • தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக ரூ.2.40 லட்சம் செலவு செய்துள்ளார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத் திடலினை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்ட த்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் தேனீக்கள் வாயிலாக மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும் இனத்தின் கீழ் தேனீப்பெட்டி மற்றும் தேனீ பிழிந்து எடுக்கும் கருவி வாங்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக 40 சதவீதம் வழங்கப்பட உள்ளது. அதற்காக 150 தேனீப்பெட்டிகள் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தப்பட்சம் விவசாயிக்கு 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும. அந்த நிலத்தில் பல்லாண்டு பயிர்கள் மா, கொய்யா போன்ற பழமரங்கள் மற்றும் முந்திரி போன்ற தரிசு நில பயிர்கள் அமைந்து இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு குறைந்தப்பட்சமாக 10 தேனீப்பெட்டிகள் அதிகப்பட்சமாக 50 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவி வழங்கப்படும். 10 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவியின் மொத்த விலை ரூ.60 ஆயிரம். அதில் 40 சதவீதம் அரசு மானியமாக ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தெற்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு 10 தேனி வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது. சிறப்பான பராமரிப்பால் தற்போது 400 தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்துள்ளார்.

தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக ரூ.2.40 லட்சம் செலவு செய்துள்ளார். தேன் மகசூல் மூலம் ரூ.2.20 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் 100 பெட்டிகளை அவர் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் ரூ.2.20 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3.40 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News