உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து கிராமசபை கூட்டத்தில் விளக்கம்

Published On 2023-10-03 07:24 GMT   |   Update On 2023-10-03 07:24 GMT
  • கமுதி அருகே முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து கீழராமநதி கிராமசபை கூட்டத்தில் விளக்கம் அளித்தனர்.
  • துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅழகர்சாமி முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மைதீன், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், ஊராட்சி செயலர் முத்துராமு உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் எல்லாருக்கும் எல்லாம் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன், புதுமைப்பெண் ஆகிய திட்டங்கள் குறித்து, ஊராட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதே போல் தலைவநாயக்கன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் புளியம்மாள் மாரிமுத்து தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராம லிங்கம் முன்னிலை வகித்தார். இதில் துணைத் தலைவர் ஜெயராமன் கிராம நிர்வாக அலுவலர் புனிதா, ஊராட்சி செயலர் முகம்மதுஹக்கீம் உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பாக்குவெட்டி, ஆனையூர், பேரையூர், புதுக்கோட்டை, இடையங்குளம் உள்பட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News