உள்ளூர் செய்திகள்

பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி

Published On 2023-11-21 12:02 IST   |   Update On 2023-11-21 12:02:00 IST
  • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
  • இதில் பரமக்குடிக்கு வருகை தந்த இளைஞர்களுக்கு முருகேசன் எம்.எல்.ஏ. அசைவ விருந்து வழங்கினார்.

பரமக்குடி

தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.

இதைெயாட்டி இளை ஞர் அணி மாநில மா நாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரத்திற்கு வருகை தந்தது.

பேரணியில் 188 பேர் பங்கேற்றுள்ளனர். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு வருகை தந்த தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணிக்கு முருகேசன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இருசக்கர வாகன பேரணியில் வந்தவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் ஏற்பாட்டில் தனியார் கல்யாண மண்டபத்தில் அசைவ விருந்து வழங்கப்பட்டது.

ஆட்டுக்கறி குழம்பு, நாட்டுக்கோழி கிரேவி, வஞ்சரம் மீன் வறுவல், சிக்கன், மீன் குழம்பு என விருந்து அளிக்கப்பட்டது. இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் உணவு பரிமாறினர்.

Tags:    

Similar News